கொரோனா ஊரடங்கால் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சினிமா தியேட்டர்கள் இந்தியா முழுவதும் மூட்டப்பட்டு நூறு நாட்களுக்கு மேல் ஆகிறது. அதே நிலைமை யில் பெரிய ஹீரோக்களும் முடங்கிக் கிடக் கின்றனர். இதே நிலைமைதான் அடுத்த ஒரு வருடத்துக்கு நீடிக்கும். அத்துடன் தியேட்டர் கலெக்‌ஷன் ஸ்டார் அந்தஸ்த்து எல்லாமே முடிவுக்கு வந்துவிடும் என பிரபல இயக்குனர் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடித்த விஸ்வரூபம் படத்தின் 2 பாகங்க ளிலும் நடித்தவர் சேகர்கபூர். இவர் பண்டிட் குயின் உள்ளிட்ட பல படங்களும் இயக்கி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்,’குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்திற்கு தியேட்டர்கள் திறக்கப் போவ தில்லை. எனவே முதல் வாரங்களில் 100+ கோடி வசூல் என்ற தம்பட்டம் எல்லாம் பழங்கதையாகி விடும். தியேட்டர் ஹீரோக் களின் ஸ்டார் அந்தஸ்த்தும் முடிவுக்கு வந்துவிட்டது.
தியேட்டரில் படம் என்ற அமைப்பு மலை யேறுகிறது. நட்சத்திரங்கள் தங்களது சொந்த பயன்பாடுகளின் மூலம் ஏற்கனவே இருக்கும் ஒடிடி இயங்குதளத்திற்கு செல்ல வேண்டும் அல்லது படங்களை ஸ்ட்ரீம் செய்ய வேண்டும். தொழில்நுட்பம் மிகவும் எளிது ”என்று சேகர் கபூர் ட்வீட் செய்துள்ளார்.