மன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….!

சண்டிகர்: ஹரியாணாவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பி அளித்து மன்னிப்புக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார்.

ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து 1,710 டோஸ் கொரோனாதடுப்பூசிகள் திருடப்பட்டன. கோவிஷீல்டு டோஸ் 1,270 மற்றும் கோவாக்சின் 440 டோஸ்கள் மருத்துவமனையில் இருந்து திருடு போனதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந் நிலையில், ஒரு டீக்கடையில் பாலித்தீன் பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து அதனை திறந்து பார்த்தனர். அப்போது, அதில் கொரோனா தடுப்பூசி பெட்டகம் இருந்தது.

அதனுடன் ஒரு காகிதத்தில், மன்னித்து விடுங்கள், மருத்துவமனையில் தான் திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது என எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.