மதுரை

மிழகத்தில் மதுரையில் தாம் கண்ட ஒரு எளியவரின் வேட்டி உடையால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி அதன் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் வெறும் வேட்டியும் துண்டும் மட்டுமே உடுத்தினார்.

குடியரசு தின விழா ஊர்வலத்தில் மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாளை ஒட்டி அவர் எளிய உடைக்கு மாறியதை குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் அதற்கு முன்பு அணிந்திருந்த கால்சட்டை மற்றும் மேல் சட்டையை ஒரு ஏழை விவசாயியைப் பார்த்து மாற்றிக் கொண்டுள்ளார். அது குறித்த மேல் விவரங்கள் இதோ

பிரபல எழுத்தாளரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், “காந்தி தென் ஆப்ரிக்காவில் பாரிஸ்ட்ராக இருந்ததால் அவர் 1896 ஆம் வருடம் வந்த போது சூட் உடை அணிந்து வந்தார். அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து அவரை மகாத்மா என யாரும் சொல்லும் முன்பு அவர் சாதாரண கால்சட்டை மேல் சட்டையுடன் வந்தார்.

மதுரை மாநகருக்கு அவர் 1921 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வந்த போது அவர் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருந்த மேல மாசி வீதியில் 251 ஆம் எண் கொண்ட இருப்பிடத்தில் இருந்த போது அவர் ராமநாதபுரம் செல்ல விரும்பினார்.

அனைவரும் அவருக்காக காத்திருந்த போது அவர் ஒரு வேட்டி மற்றும் துண்டுடன் பயணத்தை தொடங்கினார். அந்த வீடு தற்போது காதி எம்போரியமாக இயங்கி வருகிறது. அந்த எளிய உடையுடன் காந்தி மக்களை முதலில் சந்தித்த இடத்துக்கு தற்போதைய பெயர் காந்திப் பொட்டல் ஆகும்.

வெகு நாட்களாகவே காந்தி தனது தோற்றத்தில் மாறுதலை ஏற்படுத்த எண்ணி இருந்தார். சாதாரண மக்களைப் போல் தானும் மாற வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவர் இந்த உடையை மதுரையில் ஒரு ஏழையைப் பார்த்து தேர்வு செய்ததாக அவர் பல முறை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் பலரும் இதை விரும்பவில்லை. காந்தியின் நெருங்கிய நண்பரான ராஜாஜி காந்தியை இந்த உடையில் பார்த்தால் பித்து பிடித்தவர் போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜாஜியைப் போல் பலரும் அவரிடம் இந்த உடையை மாற்ற சொல்லி உள்ளனர். ஆனால் யார் கூறியதையும் கேளாமல் காந்தி இறக்கும் வரை இதே உடையில் இருந்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து அரசரை சந்திக்கவும் அவர் இதே உடையில் சென்றார்.

அப்போது சிலர் அரசர் இவரை அரைநிர்வாண பிச்சைக்காரன் என நினைக்கக் கூடும் என கூறினார்கள். ஆனல் காந்தி அவர் அப்படி நினைத்தாலும் நான் அவரை அரசர் என மட்டுமே நினைப்பேன் என பதிலளித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.