சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது.

படத்தில் சிம்ரன், திரிஷா உள்பட இந்தி நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்து உள்ளது.