ஒன்றைமணி நேரம் நீடிக்கும்: வரும் 27ந்தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

கொல்கத்தா:

ந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மிக நீண்ட சந்திர கிரகனம் வரும் 27ந்தேதி நடைபெற இருப்ப தாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த கிரகணம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கிரகணத்தின்போது  சந்திரன்  சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் என்றும், இந்தியாவில் கிரகணத்தை பார்க்கலாம் என்றும் கூறி உள்ளனர்.

சூரியன் மற்றும் சந்திரனுக்கு நடுவில் பூமி வருவதும், இதனால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதும் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.

ஏற்கனவே இந்த ஆண்டு  ஜனவரி 31ம் தேதியன்று சந்திர கிரகணம் நிகழ்ந்த  நிலையில், இந்த மாதம் 27ந்தேதி மீண்டும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது  இந்த நூற்றாண்டின் நீண்ட கிரகணமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கிரகணம் 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணத்தின்போது,  சந்திரன் சிவப்பு நிறத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், இந்த கிரகணத்தை  வரும் 27-ம் தேதி பின்னிரவு முதல் 28-ம் தேதி அதிகாலை வரை இந்தியாவில் அனைவரும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27-ம் தேதி நள்ளிரவு 11.54 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம், 28-ம் தேதி அதிகாலை  1.52 மணி வரை இருக்கும் என்றும், அப்போது சந்திரன்  சந்திரனை முழு இருள் படர்ந்த சிகப்புநிற ரத்த நிலவாக தோன்றும், இந்த காட்சி அதிகாலை 2.43 மணிவரை தொடரும்  என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த சந்தி முழுக்கிரணத்தின் போது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோமீட்டர்களாக இருக்கும்.

இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதி களில் உள்ளவர்கள் மட்டுமின்றி, தெற்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில்  வாழும் மக்களும்  கண்டு ரசிக்கலாம்

இந்த தகவலை  பிர்லா கோளரங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.