பௌர்ணமியில் நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம்

ஜூலை 27ம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நிகழும் சந்திர கிரகணம் சரியாக 4 மணி நேரம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

lunar-eclipse

வெள்ளிக்கிழமை நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.54 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.49 மணிக்கு வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வட அமெரிக்காவை தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளிலும் காணலாம் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முழு சந்திர கிரகணம் பிடிப்பதற்கு ஒரு மணி 43 வினாடிகள் ஆகும் என்றும், அதன்பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஆறு நிமிடங்கள் வரை கிரகணம் நீடிப்பதால் பூமியை கடந்து செல்ல 4 மணி நேரங்கள் எடுத்து கொள்ளும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜூலை 30 மற்றும் 31ம் தேதி பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கோள் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வானத்தில் முழு சந்திரன் பிரகாசிக்கும் பௌர்ணமி அன்று இந்த கிரகணம் நிகழ உள்ளது. அதாவது, சிகப்பு சந்திரனில் கிரகணம் பிடிப்பது இதன் சிறப்பு அம்சமாகும். கிரகணத்தின் போது சந்திரன், பூமி மற்றும் சூரியனுக்கு ஈடாக ஒரே நேர்கோட்டில் அமையும். அதேபோல், சூரியன் மற்றும் பூமிக்கு எதிர் திசையில் சந்திரன் இருக்கும்.

ecllipes

கிரகணத்தின் போது பூமியின் நிழலின் சந்திரன் நகரும் போது ஒரு பகுதி வெளிச்சமாகவும், ஒரு பகுதி இருண்டும் காணப்படும். இந்த கிரகணத்தை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் காணலாம். முழு கிரகணம் பிடித்த நிலையில் தென் அமெரிக்காவில் இருக்கும் மக்கள் காண முடியும்.