Random image

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலர் வெளியானது

யன்தாரா – யோகிபாபு இணைந்து நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா – யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும்  படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தின் பெயரை  சுருக்கமாக கோகோ என்றும் அழைத்து வருகின்றனர்.

இந்த படத்தில் நயன்தாராவை  முன்னிலைப்படுத்தி கதையசம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  நயன்தாரா பிரதான வேடத்தில் போதை மருந்து  கடத்தும் பெண்ணாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன்  குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படம் வெளியிட தயாரிப்பு நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

டிரைலரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?time_continue=1&v=D1BRfZjnhec