நீட் தேர்வு சட்டத்தின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் நடத்தப்படுகிறது என்ற பிரச்சாரம், பிஜேபியின் மற்றுமொரு போட்டோ ஷாப் பித்தலாட்டம்…

உண்மை என்னவென்றால்……… 2013ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு எதிராக வேலூர் கிருத்துவ மருத்துவக்கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மருத்துவ கவுன்சிலுக்கு நீட் தேர்வு நடத்த அதிகாரமில்லை என்று தீர்ப்பு அளித்து விட்டது.

அப்போதைய தலைமை நீதிபதி தாமஸ்கபீர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் அவரும் மற்றொரு நீதிபதி விக்ரம்ஜித் சென் நீட்க்கு எதிராக தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி அனில் தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.

இதற்கு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமானால் உடனே தாக்கல் செய்ய வேண்டுமல்லவா. ஆனால் நீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் ஓய்வு பெறும்வரை காத்திருந்து சீராய்வு மனு தாக்கல் செய்யாமல் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது மருத்துவ கவுன்சில்.

காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் வரை சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இரண்டு வருடம் கழித்து பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த சீராய்வு மனு விசாரனை செய்த அரசியலமைப்பு அமர்வின் தலைவராக நீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி அனில் தவே இடம்பெறுகிறார்.

இவரும் அமர்வில் மற்றொடு நீதிபதி கோயல் இருவரும் நேரடியாக பிஜேபி ஆதரவாளர்கள். அனில் தவே ஒரு வழக்கில் நான் ஹிட்லராக இருந்தால் அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக்குவேன் என்று சொன்னவர். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். ஆனால் எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

மேலும் இந்த வழக்கு தாக்கல் செய்த கிருத்துவ மருத்துவக்கல்லூரியை சீராய்வு மனுவில் ஒரு பார்ட்டியாக சேர்க்க்வில்லை. அவர்களின் வாதத்தையும் கேட்கவில்லை. இது இயற்கை நியதிகளுக்கும், சட்டக்கோட்பாடுகளுக்கும் எதிரானது.

உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கிலும் இது நடந்தது இல்லை. ஆனால் பிஜேபி ஆட்சியில் இருப்பதால் இது நடக்கிறது.

சீராய்வு மனுக்களை விசாரிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை கடைபிடிக்காமல் விசாரனை நடத்தப்பட்ட 11.4.2016 ல் நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறது.

இது இறுதியான தீர்ப்பல்ல. இந்த வழக்கை மீண்டும் புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. அப்படியானால் இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல. எனவே இறுதித் தீர்ப்பு வரும் வரை பழைய நிலையே தொடர வேண்டுமல்லவா. அதுதானே நியாயம்.

ஆனால் அதற்கு மாறாக அவசரகதியில் நீட்டை அமுல்படுத்துகிறது உச்சநீதிமன்றம். இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்தில் மே 1ம் தேதி நீட் தேர்வை நடத்த உத்தரவிடுகிறது. அதன் பிறகு 1 ½ வருடங்கள் ஆகியும் நீட் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படவில்லை.

ஆக உச்சநீதிமன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வருவது நியாயமே. சரி சில வருடங்கள் கழித்து புதிய அமர்வு அமைக்கப்பட்டு நீட் தேர்வு முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அனிதாக்களின் படுகொலைக்கு, நீட்டால் மருத்துவ கனவுகளை காவுகொடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது……

எனவே நீட் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் புதிய அமர்வு உடனே அமைக்கபட வேண்டும். அதன் இறுதித் தீர்ப்பு வரும்வரை நீர் தேர்வை நிறுத்திவைக்க வேண்டும்.