முறைகேடு செய்ய திட்டமா? சத்திஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் புகுந்த 2 ரிலையன்ஸ் ஊழியர்கள் கைது…. பரபரப்பு

ராய்ப்பூர்:

த்திஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் பாதுகாப்பை மீறி புகுந்த  2 ரிலையன்ஸ் நிறுகவன  ஊழியர்கள் லேப்டாப் உடன்  கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த  12ம் தேதி 18 தொகுதி களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்றது. மீதமிருந்த  72 தொகுதிகளுக்கும்  நவம்பர் 20ந்தேதி  2வது கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 11ந்தேதி நடைபெற உள்ளதால்,  வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஜபல்பூரில் உள்ள இடத்துக்கு கொண்டு வரப்பட்டு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஊழியர்கள்

இந்த நிலையில்,  அங்கு  காவல்துறையின் கடுமையான பாதுகாப்பை மீறி இரண்டு இளைஞர்கள் புகுந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவு இயந்திங்கள்  ஜபல்பூர் பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறைக்குள் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பை மீறி  இரண்டு இளைஞர்கள் லேப்டாப் உடன் புகுந்தனர். அவர்களை பார்த்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தும், அவர்களிடம் இருந்த லேப்டாப்களை பறிமுதல் செய்தும் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் அவர்களிடம் எந்தவொரு அடையாள அட்டையும் இல்லை என்றும், ஆனால், அவர்கள்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவு அன்று பல இவிஎம் இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட நிலையிலும்,  இவிஎம் இயந்திரங்களில் நம்பக்கத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், லேப்டாப் உடன் இரண்டு ரிலையன்ஸ் ஊழியர்கள் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் லேப்டாக் உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களில்ஏதேனும் முறைகேடு செய்ய வந்தார்களா என்பது  குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.