Random image

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசுதான் உயர்த்திக்கொண்டே போகிறது: எடப்பாடி குற்றச்சாட்டு

சேலம்:

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறுவதால் மட்டும் அவர் குற்றவாளியாகிவிட முடியாது என்று என்று கூறினார்.

மேலும் பெரோல் டீசல் மீதான வரியை மத்தியஅரசுதான் உயர்த்திக்கொண்டே போகிறது என்றும் விலை உயர்வு குறித்து மத்தியஅரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று பாரத் பந்த் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். வரியை மத்திய அரசுதான் உயர்த்திக்கொண்டே செல்கிறது என்று மத்தியஅரசு மீது குற்றம் சாட்டினார்.

மேலும், குட்கா ஊழல் சம்பந்தமாக சுகாதாரத்துறை அமைச்சர்  பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறுவதால் அவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்றும்,எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை என்றும் கூறினார்.

கர்நாடக அரசின் மேகதாது அணை செயல்திட்டம் குறித்த கேள்விக்கு, மேகதாது விஷயத்தில் தமிழக அரசின் முடிவு தெளிவாக உள்ளது. மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்