மத்தியஅரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:

த்திய அரசின் அணை  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

மத்திய அரசு சமீபத்தில் அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. முதல்வர் எடப்பாடி கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தெரிவித்தன. அதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா தமிழகத்துக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு  மாநில அணைகளை பாதுகாப்பதற்காக புதிய மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாவுக்கு கடந்த 13ந்தேதி மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  மத்திய அரசசன்  அணை பாதுகாப்பு  மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தை தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்து பேசினார். அப்போது, மாநில அரசின் உரிமைகள் இந்த மத்திய அரசின் புதிய  சட்டம் மூலம் பறிக்கப்படுவதாகவும், இந்த மசோதாவை சட்டமாக்குவதை உடனே மத்திய அரசு நிறுத்த வைக்க வேண்டும் என கூறினார்.  மேலும், இந்த மசோதா குறித்த  அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

பின்னர் இந்த தீர்மானம்  குறித்து  விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் துரை முருகன், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக வரவேற்பதாகவும்,  மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்பதற்கு இது உதாரணம், ஆணை பாதுகாப்பு மசோதா மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்றும்,  மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு இந்த  மசோதா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்  அவர் கூறிகனார்.

பின்னர்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ராமசாமி ஆகியோர் மசோதாவை வரவேற்று பேசினர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.