புதுடெல்லி:

2019-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் உலகிலேயே அதிகம் செலவாகும் தேர்தலாக இருக்கும் என அமெரிக்க பொருளாதார நிபுணர்  தெரிவித்துள்ளனர்.


543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மிலன் வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.

அதேசமயம், 2014-ம் ஆண்டு இஇந்தியாவில்  நடந்த மக்களவை தேர்தலில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவானது.

ஆனால் 2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தல் இந்த செலவை கடந்து, உலகிலேயே தேர்தலுக்காக அதிகம் செலவு செய்த நாடு என்ற இடத்தை இந்தியா பிடிக்கப் போகிறது.

பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டியில் இடைவெளி குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் வருவதால், தேர்தல் செலவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்த தேர்தலாக இது இருக்கப் போகிறது.

அரசியல்வாதிகளும், நன்கொடையாளர்களும் செலவழிக்கும் பணமே,தேர்தலில் தண்ணீர் போல் கரைபுரண்டோடுவதற்கு காரணமாக இருக்கிறது.

அரசியல் ரீதியான நன்கொடை பெறும் விசயத்தில் இந்தியாவில் முற்றிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.

கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ யார் தேர்தல் நன்கொடை கொடுத்தார்கள் என்பதைக் கண்டறிவதும் கடினம்.

தாங்கள் நன்கொடை கொடுக்கும் கட்சி ஆட்சிக்கு வராமல் போனால், பிரச்சினைகளை சந்திக்க வேண்டுமே என்ற அச்சம் ஏற்படுவதால், ஒரு சில நன்கொடையாளர்களே தங்கள் பெயரை வெளியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.