சென்னை விமான நிலையத்தின் வருகை அரங்கம் – பயன்பாட்டை மீண்டும் ஒத்திப்போட்ட கொரோனா வைரஸ்!

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திலுள்ள பயணிகளுக்கான வருகை அரங்கம்(arrival hall) திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஹால் கடந்த 2013ம் ஆண்டே திறந்து வைக்கப்பட்டுவிட்டாலும், சென்னை விமானத்தை முதற்கட்டமாக நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்றதால், பயன்படுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

மேலும், இம்மிகிரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் பிரிவுகளில் போதுமான அளவிற்கு ஊழியர்கள் இல்லாததும் இந்த ஹால் பயன்பாட்டிற்கு வராததற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

மேலும், பயணிகள் புறப்பாடு நோக்கத்திற்காக இந்த அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டும், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வந்தது.

ஆனால், மார்ச் மாத மத்தியில் இந்த ஹாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் சமீபத்தில் முடிவு செய்தாலும், தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால், அந்தப் பயன்பாடு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.