மக்களவை தேர்தலுடன் காலியாக உள்ள 21சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்காது

நெட்டிசன்:

Tharasu Shyam முகநூல் பதிவு

க்களவைத் தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்காது.

திருப்பரங்குன்றம் திருவாரூர் இடைத்தேர்தல்கள் விதவிதமான காரணம் கூறப்பட்டு நடத்தப்படவில்லை லோக்சபா தேர்தல் நடக்கும் போது காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தேர்தல் கமிஷன் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அபிடவிட்டில் ஏப்ரல் 24ஆம் தேதி தான் இதற்கான பரிசீலனை என்று கூறி உள்ளது

லோக்சபா தேர்தல் மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏப்ரல் முதல் கட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருக்கிறது ஏப்ரல் 24 அல்லது அதற்கு முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் வந்துவிடுகிறது

எனவே காலியாக உள்ள தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை சொல்லப்போனால் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியில் பேரமே இதுதான் என்ன மனு கொடுத்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாது

Leave a Reply

Your email address will not be published.