ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயர்: டில்லி மாநகராட்சி முடிவு

டில்லி:

லைநகர் டில்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை  சூட்ட டில்லி  மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் 17ந்தேதி மாலை டில்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்  பல இடங்கள் விமான நிலையம், துறைமுகம், கல்வி நிறுவனங்களுக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது

இந்தநிலையில், தலைநகர் டில்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்ட வடக்கு டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு டில்லி மாநகராட்சி மேயர் ஆர்தர் குப்தா, “ராம்லீலா மைதானம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த  மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்களில் வாஜ்பாய்  உரையாற்றியிருக்கிறார். அதனால் அவரது நினைவாக மைதானத்தின் பெயரை அடல் பிகாரி வாஜ்பாய் ராம்லீலா மைதானம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இ

துதவிர மாநகராட்சி மருத்துவமனைக்கும் அவரது பெயர் சூட்டப்படும். வரும் 30-ம் தேதி இது தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார்.

டில்லி ராம்லீலா மைதானத்தில்தான் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம், மேலும் பல அரசியல் கட்சிகளின் முக்கிய போராட்டங்கள், திருவிழாக்கள் போன்றவை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.