பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ! உண்மை என்ன?

ர்நாடகாவில் பாம்புக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோ யுடியூப் வலை தளத்தில் வைரலாக பரவியது.

தாகத்தால் தண்ணீர் தேடி கர்நாடகா கைகா பகுதிக்கு வந்த நாகத்துக்கு வனத்துறையினர் தங்களிடம் இருந்த பாட்டில் தண்ணீர் ஊற்றுவது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு வீடியோவை முதலில் பதிவேற்றியது, கர்நாடகாவை சேர்ந்த

உத்தர கன்னடா என்ற செய்தி நிறுவனம். அதையடுத்து,  ஹப்பிங்ஸ்டன் போஸ்ட் என்ற பத்திரிகையும் இந்த வீடியோவை வெளியிட்டு, பாம்பு குறித்த  செய்தியை வெளியிட்டு பாம்பு பற்றிய அனுதாபத்தை தேடியது.

தற்போது இந்த பாம்பு தண்ணீர் குடிக்கும் வீடியோ குறித்த உண்மை வெளியாகி உள்ளது.

கர்நாடக வனப்பகுதியில் இருந்து இந்த பாம்பு மீட்கப்பட்டதாக வனச்சரகர் ஒருவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கைகை பவர் பிளாண்ட் அருகே உள்ள பகுதியில் இந்த பாம்பு பகல் 12.30 மணி அளவில் பிடிபட்டதாக வனச்சரசகர் நயக்கா என்பவர் கூறி உள்ளார்.

கடும் வெப்பத்தின் காரணமாக, நீரின்றி சோர்வாக இருந்த அந்த பாம்பை பாம்பு பிடி நிபுணர் ராகவேந்திரா உடன் இணைந்து மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்து சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளார்.

வருடாவருடம் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்றும், இனப்பெருக்க காலத்தில் பாம்புகள் தங்களுக்கான துணையை தேடி அலையும். இது ஒரு பொதுவான நிகழ்வு என்றும் கூறினார்.

தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்தின் காரணமாக பாம்புகள் மட்டுமின்றி வன உயரினங்கள் பாதிப்பு உள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.