ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் மாநிலத்தில் ஒரு ரெயில்வே நிலையத்தை அந்த கிராமத்தை சேர்ந்தவர்களே பராமரித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் ரஷீத்புராகோரி என்ற பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கட்டபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது இந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து கிடையாது. கடந்த 2005ம் ஆண்டே போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறி, ரெயில்போக்குவரத்தை ரெயில்வே துறை நிறுத்தி விட்டது.

இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, அந்த பகுதி மக்களே ரெயில் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்று ரெயில்வே துறை உத்தரவிட்டது.

இந்நிலையில்,  ஜெய்ப்பூரில் இருந்து, 125 கி.மீ., தொலைவில் உள்ள  பாரம்பரியம் மிக்க இந்த ரெயில்நிலையம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும், 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ரெயில்வேசை தொடஙகி உள்ளது.