மோடி அரசின் குண்டர்களால் இந்திய இளைஞர்களின் குரல்கள் தினமும் ஒடுக்கப்படுகிறது! சோனியாகாந்தி கண்டனம்

டெல்லி:

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இந்தியாவின் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான மற்றும் இழிவான  வன்முறை, மாணவர்கள் குரல்கள் ஒடுக்கப்படுகிறது,  இதை  ஏற்றுக்கொள்ள முடியாது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நேற்று மாலை முகமூடி அணிந்தப்படி, கையில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த  மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமாக சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இவர் விடுத்துள்ள அறிக்கையில்,  மாணவர்களின் குரல் ஒவ்வொரு நாளும் ஒடுக்கப்பட்டு வருகிறது.  மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவு குண்டர்களால் இந்தியாவின் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான மற்றும் முன்னோடியில்லாத இழிவானவன்முறை, இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.