மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்வு

சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்ந்தது.காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,126 கன அடியிலிருந்து 6,559 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 66.49 டி.எம்.சி.யாக இருந்தது.