‘வீடியோ ஹாலில்’ கணவனிடம் ’’தகவல்’’ சொல்லி விட்டு தூக்கில் தொங்கிய பெண்..

கோவை முத்துக்கவுண்டன் புதுரை சேர்ந்த ராஜேஷ் குமார், நாகலாந்து மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைபார்த்த போது அவர், சங்கீதா என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். சென்னையில் தான் முதலில் இருந்தனர். நாகலாந்துக்கு மாற்றலானதால், மனைவியை கோவை யில் வீடு பார்த்து அமர்த்தி விட்டு நாகலாந்து சென்று விட்டார், ராஜேஷ்குமார்.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் கோவைக்கு வந்துள்ளார்.  கொரோனா காரணமாக விடுமுறை கிடைக்காததால், அதன் பின் அவரால் மனைவியை பார்க்க வர முடியவில்லை.

வீடியோ ஹாலில் அடிக்கடி, கணவனுடன் பேசும் சங்கீதா, ஊருக்கு வருமாறு ஒவ்வொரு முறையும் வற்புறுத்தினார். ’’விடுமுறை கிடைக்க வில்லை’ என ஒவ்வொரு முறையும் பதில் சொன்னார், ராஜேஷ்குமார்.

மூன்று தினங்களுக்கு முன் வழக்கம் போல் இருவரும் வீடியோ ஹாலில் பேசியுள்ளனர்.

‘தனிமையில் இருப்பதால் மன அழுத்தம் உண்டாகிறது. ஒருமுறை ஊருக்கு வந்து விட்டு செல்லுங் கள்’’ என்று மீண்டும் கணவனிடம் சொல்ல, அவர், தனது நிலைமையை விளக்கி உள்ளார். உடைந்து போன சங்கீதா’’ நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’’ என சொல்லி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

சொன்ன மாதிரியே, சில நிமிடங்களில் மின் விசிறியில் தூக்கு மாட்டி சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.

-பா.பாரதி.