Random image

‘தலித்’ வார்த்தை பயன்படுத்தலாம்: மத்திய அரசு ‘பல்டி’

டில்லி:

லித் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. சமீபத்தில் ‘தலித்’ என்ற  வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்த நிலையில், தற்போது பயன்படுத்தலாம் என்று கூறி தனது நிலையில் இருந்து பல்டி அடித்து உள்ளது மத்திய அரசு.

தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தலித் ’ என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஊடக நிறுவனங்களுக்கு கடிததம் எழுதியதாக  தகவல்கள் வெளியானது. விவாதங்களின் போதும், செய்தி குறிப்பிலும் தலித் என்ற வார்த்தையை உபயோகிப்பத்தை தவிர்க்கும் படி கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் பொதுவாக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை ‘தலித்’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். 1940ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தை தொடர்ந்தே தலித் என்ற வார்த்தை உருவானதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து  1970-ல் மராட்டியத்தில் ‘தலித் பாந்தர்ஸ்’ என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த நிலையி தலித் என்ற வார்த்தை மரியாதை குறைவானது என்று கூறி ஒரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தலித் என்ற வார்த்தை சாதி ரீதியாக தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டுகிறது என்றும், நாங்கள் எங்கள் அடையாளத்தை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் ‘தலித்’ வார்த்தை உபயோகப்படுத்த தடை என செய்தி வெளியான நிலையில், தற்போது த்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில், தலித் என்ற வார்த்தை பயன்படுத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது, ஊடங்களின்   விவாதங்கள், கட்டுரைகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்தலாம், தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம்  என்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், காவல்துறையில் எழுதப்படும்  புகார்கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அரசியல் சட்டப்படி தாழ்த்தப்பட்டோர் என்ற வார்த்தை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும்  தெரிவித்துள்ளது.