சென்னை:

ரசுப் பதிவுகளில் மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கை என்ற வார்த்தை பயன்படுத்தக்கூடாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. திருநங்கை என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள  திருநங்கைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த திருநங்கைகளுக்கான விருதுக்கு’ பரிந்துரைகளை அனுப்புவதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருநங்கை/கள்” தட்டச்சு செய்யப்பட்ட இடங்கள் அடிக்கப்பட்டு, அவற்றின் மேல் மூன்றாம் பாலினத்தவர் என கையால் எழுதப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ‘திருநங்கை’ என்பதற்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என்ற சொல்லை பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆணைகள் மற்றும் அறிக்கைகளில் மூன்றாம் பாலினத்தவரை குறிக்கும் போது ‘திருநங்கை’ என்ற வார்த்தையே இதுவரை  குறிப்பிடப்பட்டு வந்தது. இதனைத் தற்போது தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சமூகநலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இனிமேல் திருநங்கை என்ற சொல்லிற்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என்ற பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த  22ஆம் தேதி தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசு அறிக்கையில் , திருநங்கைகள் என்று இருந்த இடத்தில் கையால் மூன்றாம் பாலினத்தவர் என்று மாற்றி எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாம் பாலித்தவர்களை, அரவாணிகள் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், திருநங்கை என்று அழைக்கும் வகையில்,   தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களை திருநங்கை, திருநம்பி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களிலும் அவ்வாறே  பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.