உலகின் உயர்ந்த ஆண்… உலகின் குள்ளமான பெண் சந்திப்பு

லகின் குள்ளமான பெண்ணான இந்தியாவை சேர்ந்த ஜோதி, துருக்கியை சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.

எகிப்து நாடு, தனது நாட்டில்  சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக, உலகின் உயர்ந்த மனிதனுக்கும், உலகின் குள்ளமான பெண்ணுக்கும் அழைப்பு விடுத்து சந்திக்க ஏற்பாடு செய்தது.

அதன்படி,  உலகிலேயே குள்ளமான பெண்ணான இந்தியாவின்  நாக்பூர் பகுதியை சேர்ந்த 25 வயதான  ஜோதி ஆம்கே என்பவருக்கு அழைப்பு விடுத்தது.   இவரது உயரம் 2 அடி மற்றும் 6 அங்குலம் (62.8 செ.மீ.).

இவர் உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்திருக்கிறார்.

அதுபோலவே, உலகின் உயரமான மனிதராக,  துருக்கியை சேர்ந்தவர் சுல்தான் கோசென் (வயது 36).  8 அடி மற்றும் 9 அங்குலம் உயரம் கொண்டவர்.

இவர்கள் இருவரையும்   தங்களது நாட்டுக்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது. அதன்படி இருவரும் துருக்கி சென்று சந்தித்து பேசினார்.

இருவருடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை தற்போது துருக்கி வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.