உலகிலேயே அதிகவிலைக்கு  செம்மறி ஆடு ஒன்று விற்பனையாகி உள்ளது. இது 490,000 டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

ஸ்காட்லாந்து ஆட்டுச்சந்தையில், இந்த ஆடு  அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதாகவும் அது உலகிலேயே மிக விலை உயர்ந்த ஆடாகவும் கருதப்படுகிறது.

ஸ்காட்கலாந்தில் ஆடுகள் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு வியாபாரிகள், வாடிக்கையாளர் ஆடுகளை கறிக்காக ஏலம் எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வாரம் சந்தையில்  நடைபெற்ற ஏலத்தின்போது,  டெக்செல் வகை செம்மறி ஆடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக $490,000 (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி) விலைக்கு விற்பனையாகி உள்ளது.

சந்தைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே இந்த 6மாத டெக்செல் செம்மறி ஆட்டுக்குட்டி பெரும் வரவேற்பை பெற்றதாகவும், அதன் எடை மற்றும் நடவடிக்கை அனை வரையும் கவர்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து,  டெக்செல் ஷீப் சொசைட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இந்த ஆட்டுக்குட்டி சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும், இந்த ஆட்டுக்குட்டிக்கு தொடக்க ஏலத்தொகையாக $13,000க்கு நிர்ணயிக்கப்பட்டு, ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால், இதை ஏலம் எடுக்க 3 பண்ணை யாளர்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அந்த குட்டியின் விலை இறுதியாக $490,000 விற்பனையானது என்று தெரிவித்து உள்ளது.

6மாத வயதான டெக்செல் செம்மறி ஆடு இந்திய மதிப்பில் சுமார்ர் ரூ. 3 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்டது. இதன் மூலம் உலகிலேயே மிக விலை உயர்ந்த ஆடாக இது திகழ்கிறது.

டெக்செல் செம்மறி ஆடுகள் ஹாலந்தில் தோன்றியவை என்று கூறப்படுவதுடன், கறி உணவுக்கு சுவையானது என்றும்,  கசாப்புக் கடையினருக்கு  பிடித்தவை என்று டெக்சல் செம்மறி ஆடுகள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று நடைபெற்ற முந்தைய ஏலங்களில்,  23 0,000 பவுண்டுக்கு (சுமார் 2 கோடி)  கடந்த  2009 ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், அதையடுத்து தற்போதுதான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெக்செல் வகை செம்மறி ஆடுகள் நெதர்லாந்தின் காரையோரத்தில் உள்ள சிறிய தீவில் அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் அதிகமான விலைக்கு விற்பப்படுவதாக வியாரிபார்கள் தெரிவிக்கின்றனர்.