“அறம்” ஓடும் தியேட்டர்களில்தான் இந்தத் தரம் கெட்ட படமும் வரப்போகுது..

டந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான “அறம்” திரைப்படம் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது.

மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்களை, அவர்கள் ரசிக்க – ஏற்கத்தக்க வகையில் கூறியிருக்கும் படம் என்று ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவரும் புகழ்கிறார்கள்.

இயக்குநர் சந்தோஷ் – நடிகர் கௌதம்

ஆபாச காட்சிகள் இல்லை, வெட்டுகுத்து சண்டகைகள் இல்லை..  படத்தின் கதைக்களம்கூட பிரமிக்க வைக்கும்படியாக இல்லை.. எளிமையான மக்களின் வாழ்க்கையே கதைப்பின்னணியாக அமைந்த படம் என்றும் அறம் படத்தைப் புகழ்கின்றனர்.

இந்தப் படத்தின் இயக்குநர் கோபி நயினாரை புகழாதவர் இல்லை. அதே போல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரவையும் அனைவரும் மனதாரப்பாராட்டுகிறார்கள்.

“அறம்..மக்களுக்கான படம்” என்று கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில், “ இருட்டு அறையில் முரட்டுக்குத்து” என்ற தலைப்பில் படம் தயாராகி வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் குமுறலுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

“அறம் போல் அற்புதமான படங்கள் நிலையில்தான் சமுதாயத்தைச் சீரழிக்கும் கழிசடை சினிமாக்களும் வருகின்றன.

அப்படி ஓர் படம்தான்.. “இருட்டு அறையில் முரட்டுக்குத்து” என்பது புரிகிறது. நேரடியாகவே ஆபாச அர்த்தம் தரும் வார்த்தைகளை டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

தலைப்பே இப்படி என்றால் படம் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்பது புரிகிறது.

அறம் போல அத்தனை சிறப்பாக எடுக்க முடியாவிட்டாலும் தங்களால் இயன்ற அளவு நல்ல படம் எடுக்கலாமே.

இப்படி இளைஞர்களின் காம உணர்வை தூண்டி படம் எடுத்து சம்பாதிப்பதற்குப் பதிலாக..” என்று கடுமையாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இயக்குநர் சந்தோஷ் உ ருவாக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தை அறிவித்தபோதே எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அதுபற்றி கவலைப்படாமல் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்கள். முதலில் ஒப்பந்தமாகியிருந்த ஓவியா, பிறகு விலகிக்கொண்டார்.

தற்போது வைபவி ஷாண்டில்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர், சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த கதாநாயகியாக நடித்தவர்.

தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர்கள் இப்போது இங்கு ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநரை, சொல்ல முடியாத அளவுக்கு சமூகவலைதளங்களில் திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

“அறம் ஓடும் தியேட்டர்களில்தான் இந்த தரம்கெட்ட படமும் வரப்போகுது” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி