பெண்ணே… பெண்களை ஏமாற்றி திருமணம்! ‘பலே’ பெண் கைது

ஐதராபாத்,

ந்திராவில் பெண் ஒருவரே ஆண் வேடம் தரித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்த கில்லாடி பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக ஆண்கள்தான் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகும். அப்படித்தான் நடைபெறுவது வழக்கம்.  ஆனால், ஒரு பெண்ணே 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஈடுகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி என்ற இளம்பெண் ஆண்களைப் போல் முடிவெட்டியும் ,பேன்ட் சர்ட் அணிந்தும் ஆணைப்போன்றே தனது நடை உடைகளை மாற்றி உள்ளார்.

இதன் காரணமாக பார்ப்பதற்கு இவர் ஆண் போன்றே ஹேன்ட்சம்-ஆக காட்சியளித்துள்ளார்.

இவர் பணம் மற்றும் நகைக்காக பெண்களை திருமணம் செய்து வந்துள்ளார். ஒருவரை திருமணம் செய்ததும், அவசர வேலை என்று கூறி உடனே அந்த இடத்தைவிட்டு எஸ்கேப்பாகி விடுவாராம். இப்படி இரண்டு இடங்களில் இரண்டு பெண்கள திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார்.

இந்நிலையில் மூன்றாவதாக மோனிகா என்ற பெண்ணை  திருமணம் செய்துள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட மோனிகா, அவரை தொடர்ந்து கண்காணித்ததில், தன்னை மணந்திருப்பது பெண் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இதுகுறித்து உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் பெண்களின் பணம் நகைக்காக மட்டுமே இப்படி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.