க்னோ

னது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதைக் காணச் சென்ற நாடக நடிகரும் இயக்குநருமான தீபக் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ நகரின் புகழ்பெற்ற நாடக நடிகரும் இயக்குநருமான தீபக் கபீர் வருடா வருடம் லக்னோ மாநகரில் கபீர் திருவிழா என்னும் நிகழ்வை நடத்தி வருகிறார்.  கடந்த 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சன்னியாசியான கபீர்தாசரின் நினைவாக இந்த விழாவை நடத்தி வரும் இவர் தனது பெயரின் பின்னால் மரியாதை காரணமாக கபீர் என்பதை இணைத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சதஃப் ஜாஃபர், முகமது சோயிப், ராபின் வர்மா உள்ளிட்ட 120 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.   இவர்களில் சிலர் தீபக் கபீரின் நண்பர்கள் ஆவார்கள்.  அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதை அறிய ஹஸ்ரத்கஞ்ச் காவல்  நிலையத்துக்கு இவர் சென்றுள்ளார்.  அங்கு காவல்துறையினர் இவரைக் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது காவல்துறையினர் தீபக் கபீரை குற்றவாளிகளை ஏன் காண வந்தார் எனக் கேட்டு துப்பாக்கி கட்டையாலும் லத்தியாலும் தாக்கியதாக அவர் உறவினர் தெரிவித்துள்ளார்.   அவர் மீது அரசை எதிர்த்துப் போராடியதாகவும் அரசு அதிகாரிகளைப் பணி புரிய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்த உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தீபக் கபீரின் மனைவி வீணா ராணா நேற்று அவரை லக்னோ சிறையில் சென்று பார்த்துள்ளார்.  அவரால் எழுந்து நிற்கவும் முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சரியான மருத்துவ உதவி அளிக்கப்படாததால் அவர் வீணாவிடம் வலி நிவாரணி வேண்டும் எனக் கேட்டுள்ளார்.   அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர முயற்சி நடக்கிறது.   செவ்வாய் அன்று (அதாவது இன்று) அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.