சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு….!

பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும் இதன் மூலம் தயாரிப்பு தரப்பு லாபம் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .

திரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யாவின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கோரிக்கையை ஏற்காமல் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடும் பட்சத்தில் இனி சூர்யா தயாரிக்கும் படங்களையோ அவரை சார்ந்தவர்கள் தயாரிக்கும் படங்களையோ திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

யோகி பாபுவின் காக்டெயில், த்ரிஷாவின் பரமபத விளையாட்டு, அரவிந்த் சாமியின் நரகாசூரன் என அடுத்தடுத்து பல படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாக தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .