தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் செயல்படும்! திரையரங்கு உரிமையாளர்கள்

சென்னை: தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசனை செய்து இன்று முடிவை அறிவிப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு  உட்பட்டு திரையரங்குகளை தொடர்ந்து இயக்க திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று  முதல் இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் இரவுக் காட்சி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் நேரம் மாற்றப்படுவது குறித்து இன்று  திரையரங்க உரிமையாளர்கள் காணொடிளி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினர். அப்போது, இரவு நேரங்களில் ஊரடங்கு காரணமாக,  திரையரங்குகளில் நேரம் மாற்றப்படுவது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பபட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தொடர்ந்துதிரையரங்குகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.