டெல்லி: திரையரங்குகள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த லாக்டவுனை பிப்ரவரி 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந் நிலையில், ஊரடங்கை பிப்ரவரி 28ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே, 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது. விரைவில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.