சென்னையில் மளிகை கடையை உடைத்து ரூ. 40 ஆயிரம் கொள்ளை

அயனாவரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை உடைத்து, ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையையடுத்துள்ள அயனாவரத்தில், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் துரைசாமி தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு சென்ற கோபி, காலை கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, சீட்டு பணம் ரூ. 40,000 மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அயனாவரம் காவல்நிலையத்தில் கோபி அளித்த புகாரின் அடிப்படை, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக ஐ.சி.எப், வில்லிவாக்கம் பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டை உடைத்து, கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை அடிக்கும் சம்பவம், வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.