ப.சிதம்பரம் வீட்டு கொள்ளை: போலீசார் விசாரணையை தொடர்ந்து பெண் தற்கொலை

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பெண் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  நுங்கம்பாக்கம், கதர் நவாஸ் கான் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலிருந்து கடந்த ஆண்டு சுமார் ரூ .1.5 லட்சம் பணம், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள், மற்றும் சில பட்டு புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில், சி.சி.டி.வி காட்சிகளை வைத்து ஆராய்ந்த காவல்துறையினர், சிதம்பரம் வீட்டுப் பணியாளர்கள் இருவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஒருவர், திருடப்பட்ட நகைகளை பார்வதி என்பரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூற, பார்வதியின் குடும்பத்தினர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது,  தனக்கும், அந்த  திருட்டு சம்பவத்துக்கும்  தொடர்பும் இல்லை என பார்வதி மறுத்து வந்தாக கூறப்படுகிறது.

பார்வதியின் கணவர் சந்திரசேகர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் ஒருவர் கவிதா மற்றொருவர் கமல்ராஜ். கவிதாவுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் பார்வதி,  தணிகாச்சலம் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பாண்டி பஜாரில் வசித்து வருகின்றனர்.

இவரிடம் பலமுறை விசாரணை நடத்தி வந்த நிலையில்,  கடந்த ஞூயிற்றுக்கிழமை இரவும், திருட்டு சம்பந்தமாக காவல்துறையினர் பார்வதி குடும்பத்தினரை அழைத்து மீண்டும் விசாரணை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து, நள்ளிரவு 1.30 மணிக்கே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் பார்வதியின் குடும்பத்தார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.