ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை: காவல்துறை விசாரணை

கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து, 80 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவில்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்த அவர் பேரூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறையினர், சோதனை மேற்கொண்டதோடு, வழக்கும் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி