Random image

பீகார்: முன்னாள் முதல்வர் வீட்டில் திருடர்கள் கைவரிசை

பாட்னா:

பீகார் முன்னாள் முதல்வர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1968-ம் ஆண்டு பீகார் மாநில முதல்வராக ஒருமாத காலம் இருந்தவர் பி.பி. மண்டல். இதர பிற்படுத்தப்பட்ட மக்களிட் இடஒதுக்கீடுக்கான மண்டல் கமிஷன் தலைவராக செயல்பட்டார்.

பி.பி.மண்டல் 1982-ம் ஆண்டு காலமானார். பீகார் மாதேபுரா மாவட்டம், மாதேபுரா நகரில் இவரது மகனும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மஹிந்திர குமார் மண்டல் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மஹிந்திர குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றார். நேற்றிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

லேப்டாப், செல்போன், பாத்திரங்களையும் மூட்டையாக கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய மஹிந்திர குமார் இது குறித்து சடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து திருடுபோன பொருட்களில் 80 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர்.