மனிதர்களா? மிருகங்களா? காஷ்மீர் நெடுஞ்சாலையில் செல்ல உள்ளங்கையில் ‘முத்திரை’ யிடப்படும் அவலம்…….

ஸ்ரீநகர்:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் அரசு மற்றும் காவல்துறை, ராணுவத்தின ரின் கெடுபிடிக்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலையில் 2 நாட்கள் போக்குவரத்து மட்டுமின்றி பொதுமக்கள் செல்லவும்  தடை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீர் மக்கள் கடுமையான அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகினற்னர். காஷ்மீர் பாலஸ்தீனம் கிடையாது, எங்கள் நிலத்தை திறந்தவெளி சிறையாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று மோடி அரசுக்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார்கள்.

பாதுகாப்புப் படையினர் செல்லும் வழியில், அவர்களை பயங்கரவாதிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்பதால், வீரர்களின் பாதுகாப்பான பயணத்துக்காக, ஜம்மு – ஸ்ரீநகர் – பாரமுலா நெடுஞ்சாலை யில் வாரம் இரண்டு நாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.  இந்த நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வாகனங்கள் செல்லக் கூடாது, பாதுகாப்புப் படை வாகனங்கள் மட்டுமே செல்லும் என்பதால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன.

இந்த நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக பொதுமக்கள் உபயோகப்படுத் காஷ்மீர் நெடுஞ்சாலையை  உபயோகப்படுத்துபவர்கள், அதற்கான அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் செல்ல விரும்புபவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிபதியிடம் சென்று அனுமதி வாங்கி வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த அனுமதியானது பேப்பரிலோ, பென்சிலாலோ வழங்கப்படுவதில்லை. மாறாக, அவர்களின் உள்ளங்கையில்,  முத்திரையிட்டு, அதில் நீதிபதி கையெழுத்திட்டு வழங்கப்படுகிறது. இந்த முத்திரையை காட்டினால்தான் அவர்கள் நெடுஞ்சாலையில் பயணிக்க முடியும்.

அரசின் இந்த நடவடிக்கை  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கறிக்காக வெட்டப்படும் ஆடு மாடுகளில்தான் இதுபோன்ற முத்திரைகள் பதிக்கப்பட்டிருக்கும்.

ஆனால்,மோடியின் ஆட்சியில் உயிருடன் உள்ள மனிதர்கள் ஒரு மாநிலத்திலுக்குள்யே ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்ல முத்திரை பெற வேண்டியிருப்பது  மக்களிடைய கடும் கோபத்தை கிளப்பி உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பாலஸ்தீனத்தில்தான் யூதர்களுக்கான எதிரான நடவடிக்கையில்  கடைபிடிக்கப்பட்டு வந்தன. அங்கு  காஸா எல்லை பகுதியில் வசிக்கும்  பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் சென்று தங்களது உறவினர்களை காண வேண்டுமானால், இதுபோன்ற முத்திரை பெற வேண்டிய அவல நிலை இருந்தது.

தற்போது, பாலஸ்தீனம் போன்றே, காஷ்மீரிலும் முத்திரை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள அவலம் அரங்கேறி வருகிறது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.