தேனி:

குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிக் அழைத்துச்சென்ற ஈரோட்டை சேர்ந்த பிரபுவை தேனி போலீசார் விசாரணைக்கு திடீரென  அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் போடி குரங்கணி மலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள்  உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ள நிலையில், ரூ.200 கொடுத்து அனுமதிச்சீட்டு பெற்றுத்தான் காட்டுக்குள் சென்றதாக ஈரோட்டை சேர்ந்த பிரபு என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அதுபோல சென்னை டிரெக்கிங் கிளப்பும் தனது முகநூல் பக்கத்தில் அனுமதி பெற்றுச்சென்றதாகவே கூறியுள்ளது.

இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தவரும், தீ விபத்தில் இருந்து தப்பியவருமான,   ஈரோடு பகுதியை சேர்ந்த  பிரபு என்பவர் , வனத்துறை சோதனை சாவடியில் ஒரு நபருக்கு 200 ரூபாய் வீதம் அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத் தான்  காட்டுக்குள் சென்றோம் என்று கூறி யிருந்தார்.

இவர்தான் ஈரோடு பகுதியை சேர்ந்த 12 பேரை மலையேற்ற பயிற்சிக்காக அழைத்து சென்றவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் அழைத்துச் சென்ற 12 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிரபுவை தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.