டில்லி:

ரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது: காங்.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள வேலையில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  காங்கிரஸ் தலைவர்கள்  ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் 54 பக்க தேர்தல் அறிக்கை பூட்டிய அறையில் உட்கார்ந்து கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை இல்லை என தெரிவித்த  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தவர்,  சுமார் ஓராண்டாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயார் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் அறிக்கை என்பது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ராகுல்காந்தி பல்வேறு மக்கள் நல அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்ககாட்டினார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

ஜிஎஸ்டியில் உள்ள கடுமையான அம்சங்கள் நீக்கப்படும்.தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும்; வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்

தேச விரோத தடை சட்டம் நீக்கப்படும்

நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும்

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கை உடனான மீனவர் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும்

ரபேல் விமான கொள்முதல் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்

பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படும்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் கிடையாது

இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை