5 ஆண்டுகளில் விநியோகம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்கள் விபரம் இல்லை….வெளியுறவுத் துறை

டில்லி:

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஷைலேஷ் காந்தி வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு சில கேள்விகளை கேட்டிருந்தார்.

5 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் எத்தனை?.

அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு?.

தனியார் நிறுவனங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மேற்கொண்டால், அந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு?

இது போன்ற கேள்விகளை ஷைலேஷ் காந்தி கேட்டிருந்தார்.

இதற்கு கடந்த 15-ம் தேதி பதில் அனுப்பியுள்ளார். அதில், பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றும், மற்ற கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆவண ரகசியம் பாதித்தல், பொதுமக்களின் தகவல்கள் வெளியாகுதல் போன்ற காரணங்கள் இருந்தால் பதிலளிக்க தேவையில்லை என்ற விதி உள்ளது. இதை சுட்டிக்காட்டி இந்த கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்க மறுத்துள்ளது.

ஆனால், 2012ம் ஆண்டில் 73,89,558, 2013ம் ஆண்டில் 58,17,515 பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவு துறை 2015ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.