சிங்கப்பூரில் ராஜபக்சேவுக்கு நேர்ந்த அவமானம்

கொழும்பு:

சிங்கப்பூர்  பயணத்தின்போது  இலங்கை முன்னாள் அதிபர்  மஹிந்த ராஜபக்சே கோரிய சிறப்பு பாதுகாப்பை அளிக்க அந்நாட்டு அரசு மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது சிங்கப்பூர் பயணத்தின்போது,  தனக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வலியுறுத்தினார். இது குறித்து அவரது தனிச்  செயலாளர்  இலங்கை வெளிவிவகார அமைச்சர் உதித் லொக்கு பண்டாரவுக்கு கடிதம் எழுதினார். அக் கடிதத்தில், மஹிந்தராஜபக்சேவுக்கு சிங்கப்பூரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு அளிக்கக்கோரி, அந்நாட்டை, இலங்கை அரசு மூலம் வற்புறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த கோரிக்கை, சிங்கப்பூர் அரசுக்கும் அனுப்பப்பட்டது.

ஆனால் சிங்கப்பூர் அரசோ, “ராஜபக்சேவுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க முடியாது. காரணம், அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இங்கே இல்லை. தவிர சிங்கப்பூர் வரும் முக்கிய விருந்தினர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உள்ளது” என்று மறுத்துவிட்டது.

இதனால் மகிந்தராஜபக்சே மிகுந்த மனவருத்த்துதக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலைியில், “அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டாலும், அதிபரைப்போலவே நடமாட விரும்புகிறார் ராஜபக்சே. இனியாவது அவர் இயல்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.