Random image

பொறுமைக்கும் எல்லை உள்ளது: திருவாரூரில் திமுக தோற்கும்! மு.க.அழகிரி எச்சரிக்கை

சென்னை:

டந்த 5ந்தேதி திமுக தலைமைக்கு எதிராக அமைதி பேணியை நடத்தி பரபரப்பு ஏற்படுத்திய மு.க.அழகிரி, தற்போது திருவாரூர் தொகுதியில் திமுக தோல்வி அடையும் என்று ஆரூடம் கூறி  சாபம் விட்டுள்ளார். மேலும், தனது பொறுமைக்கும் எல்லை உள்ளது என்று திமுக தலைமைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

திமுகவில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து மு.க.அழகிரி  நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீண்டும் கட்சியில் சேர முயன்றும், ஸ்டாலினால் தடுக்கப்பட்ட தாக கூறப்பட்டது. இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து மீண்டும் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அழகிரி குரல் கொடுத்தார்.

அவரது குரலை ஸ்டாலின் காதுகொடுத்து கேட்காத நிலையில், கடந்த ஆகஸ்டு  13-ந்தேதி  அன்று தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’, 5ந்தேதி அமைதி பேரணி நடைபெறும் என்றும்  என்று குண்டை வீசிவிட்டு சென்றார். இதனால் கருணாநிதி குடும்பத்திற்குள் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 5ந்தேதி அமைதி பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. அவர் கூறியபடி லட்சக் கணக்கான பேர் வரவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கில் வந்திருந்து திமுக தலைமையை மிரட்டினர்.

அப்போது அதிரடியாக அழகிரி ஏதாவது கூறுவார் என எதிர்பார்த்த ஊடகத்தினருக்கு,  இது அஞ்சலி செலுத்தும் அமைதி பேரணி என்று கூறிவிட்டு,  இந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா? எனவும் கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி  திருமங்கலம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் திமுக 4வது இடத்தைதான் பிடிக்கும், திருவாரூரிலும் திமுக தோல்வியையே தழுவும்  என்று தெரிவித்தார்.

மேலும்,  திருமங்கலம் பார்முலா என்றால் ஏதோ பணத்தை கொடுத்து ஜெயித்த தேர்தல் என்கிற குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால் 1962 இல் இருந்து கருணாநிதி எப்படி தேடுதல் பணியாற்றுகிறார் என்பதை நான் கவனித்துள்ளேன். கருணாநிதி பாணி கருணாநிதியை கொல்ல முயற்சி நடந்தது. ஆனாலும் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவார். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென பூத்துக்கு செல்வார்.

அங்கே தொண்டர்கள் தூங்குகிறார்களா? வேலை பார்க்கிறார்களா என்பதை நேரடியாக ஆய்வு செய்வார். அவர் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கடத்தி செல்வார். வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களை கையாளுவாரோ அப்படி நடந்து கொள்வார். அதே பாணியைத்தான் நானும் திருமங்கலத்தில் கையாண்டேன். திருமுங்கலத்தில் கிடைத்தது, நேர்மையான வெற்றி.

நான் இல்லாமல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமு வெல்லவே முடியாது என்றவர், அங்கு போட்டியிட்டால் ‘மூன்றாவது இடத்துக்கு தான் வருவார்கள். திருப்பரங்குன்றத்தில் நான்காவது இடத்திற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி அடுத்தவன் பேச்சை கேட்டு செய்ய முடியாது. என்னை நம்பி உள்ளவர்களுக்கு, கடைசிவரை நிச்சயம் பாதுகாவலராக இருப்பேன்.

பொறுமைக்கும் எல்லை உள்ளது எவ்வளவு பேர் என்னை நம்பி பேரணிக்கு வந்தார்கள். அவர்களுக்காகவாவது நல்ல முடிவை எடுப்பேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. காத்திருந்து பார்ப்போம்.

திமுகவில் என்னை சேர்க்காவிட்டால், நாங்களும் எங்கள் முடிவை எடுப்போம்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

திருவாரூர் தொகுதி, திமுக தலைவர் மு.க.கருணாநிதியின் சொந்த ஊர் அமைந்துள்ள தொகுதி. இந்த தொகுதியில் இருந்துதான் கடந்த முறை திமுக தலைவர் கருணாநிதி தேர்வு பெற்றார் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.