தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.  144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டது.  இந்த மோதலின் போது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு

உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் பதினோரு பேர் பலியானார்கள். மேலும் பலர்  மருத்துவமனைகளில்   சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கும்

காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் “துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு  நிவாரணம் அளிப்பதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், “11 பேர் பலியான பிறகும் ஸ்டெர்லை மூடப்படும் என முதல்வர் அறிவிக்காதது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார்.