ரஜினியுடன் மோதும் அமீர்கான் & மகேஷ்  : பயத்தில் விநியோகஸ்தர்கள்

ஜினி நடிக்கும் 2.0 படமும், அமீர் கானின் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படமும், மகேஷ் நடிக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அத்வைத் சந்தன் இயக்கத்தில் கிரண் ராவ் தயாரிப்பில் அமீர்கான் நடித்திருக்கும் படம் “சீக்ரெட் சூப்பர்ஸ்டார்“.,இதில் அமீர்கான் இசையமைப்பாளராக நடித்துள்ளார்.தங்கல் படத்தில் அமீருக்கு மகளாக நடித்த ஷாய்ரா வாசீம், மெஹர் விஜி உள்பட பலர்  இந்தப் படத்தில்  நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரபேற்பை பெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தாகூர் மது தயாரிப்பில் மகேஷ்பாபு நடிக்கும் படம் சம்பாவனி. த்ரில்லர் படமான இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.  இதன்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இதில் மகேஷூக்கு  ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடம் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. விசேஷம் என்னவென்றால், இந்த மூன்று படங்களும் வரும் தீபாவளுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மூன்று படங்களுமே மொழிகளைக் கடந்து இந்தியா முழுதும் வெளியாக  இருக்கின்றன. ஆகவே இவை ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்று விநியோஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆகவே படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றும்படி தயாரிப்பாளர்களிடம் கோரியுள்ளனர்.

ஆனால் 2.0 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது என்று அப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்  உறுதியாக இருக்கிறதாம். அதே போல மகேஷூம் தனது படத்தை தீபாவளிக்கே ரிலீஸ் செய்வது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.

ஒருவேளை அமீர்கான், தனது பட ரிலீஸை தள்ளிப்போடக்கூடும் என்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி