அரசுப் பள்ளிகளை மூடுவதில் சதி உள்ளது : முன்னாள் தமிழக அமைச்சர்.

சென்னை

மிழக அரசுப் பள்ளிகளை மூடுவதில் சதி உள்ளதாக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

சென்னையில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டணி சார்பில் மாநில மாநாடு நடந்தது.    அப்போது இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்த தீர்மானம் இயற்றபட்டது.   அத்துடன் அக்டோபர் 24 ஆம் தேதி ஊதிய மீட்பு போராட்டம் நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.

 

இம்மாநாட்டில் முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.   அவர் தனது உரையில், “தற்போது அரசுப் பள்ளிகளை மூட அரசே தீவிரம் காட்டி வருகிறது.  இதில் மிகப் பெரிய சதி உள்ளது.    இது முழுக்க முழுக்க மத்திய அரசின் மிரட்டலாகும்.   அதர்கு பயந்து முதுகெலும்பில்லாத இந்த அரசு பணிந்து போகிறது.

 

அடுத்தபடியாக தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகமும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான இயக்குனர் அலுவலகமும் விரைவில் மூடப்படும் நிலையில் உள்ளன.  அரசின் தினம் ஒரு அறிவிப்பும்,  சில நாட்கள் கழித்து அந்த அறிவிப்பை மாற்றுவதாலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்த வேண்டும்.  அத்துடன் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் பிரச்னைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.    இதற்கான நடவடிக்கைகளாக முதலில் அந்த ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த் வேண்டும்” என தெரிவித்தார்.