அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை இல்லை… : உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுக்குழுவை ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணியினர் நாளை நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், “பொதுக்குழுவை நடத்தக்கூடாது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வெற்றிவேல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர். பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தனர்.