சென்னை:
கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை,  தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ  தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது கோயம்பேடு மார்க்கெட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. அதற்கு பதிலாக, திருமழிசையில் புதிய தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் என்பவர் கோயம்பேடு சந்தையை உடனே திறக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணைஇன்று நடைபெற்றது.  அப்போது, சி.எம்.டி.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை, என தெரிவித்தார்.

கொள்ளை போகிறது கோயம்பேடு மார்க்கெட்…?

இதையடுத்து,  மனுதாரர்கள் இது குறித்து பதிலளிக்குமாறு ஆணையிட்ட நீதிபதி, சீல் வைக்கப்பட்ட கோயம்பேடு கடைகளில் இருக்கும் பொருட்களை எடுக்க கடை உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடலாம் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜுன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.