டெல்லி:

“காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை..!” என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு பதில் அளித்துள்ள முன்னாள்மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,சீனா ஊடுருவல் குறித்த பிரதமர் மோடியிடம் ஜே.பி.நட்டாவால் கேள்வி கேட்க முடியுமா? என்று  கேள்வி எழுப்பி உள்ளார்.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 15ந்தேதி நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் அளிக்கும் வகையில் சில விவரங்களை வெளியிட்டி ருந்தார். அதில்,  காங்கிரஸ் ஆட்சியில்தான்,  இந்தியாவின் எல்லைப் பகுதியில் 43,000 கி.மீ. நிலப்பரப்பு சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டதாகவும், இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை காங்கிரஸ் கைவிட வேண்டும் என்றும்,  சர்ஜிகல் தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதலை துணிவுடன் மேற்கொண்ட வர்கள் என்றும் , இந்த நேரத்தில் தேச ஒற்றுமை என்பதன் உண்மை அர்த்தத்தை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்  அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஜே.பி. நட்டாவுக்கு பதில் அளித்துள்ளார். அதில்,

கடந்த 2010-13ஆம் ஆண்டுகளில் சீனா ஊடுருவல்களின் போது இந்திய நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்யவுமில்லை, “காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை..!”

இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவும் இல்லை

2015ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சீனா ஊடுருவல் குறித்த பிரதமர் மோடியிடம் ஜே.பி.நட்டாவால் கேள்வி கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.