மதுசூதனனுக்கும் எனக்கும் மோதல் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை,

திமுகவில் எந்த உட்கட்சி பிரச்னையும் இல்லை என்றும், மதுசூதனன் வேட்பாளராக நிற்பதற்க தான் எதிர்க்கவில்லை என்றும், எனக்கும் அவருக்கும் மோதல் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், மதுசூதனனை தான் எதிர்ப்பது என்பது கூறுவது  தவறான தகவல் என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் கூறினார்..

என்னிடம் கூறிவிட்டே 3 எம்பிக்கள் அணிமாறினார்கள் என்று டிடிவி தினகரன் கூறுவது 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆட்சிமன்றக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அதுவே இறுதி யானது. ஆர்.கே.நகரில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்றார்.

மதுசூதனனை வேட்பாளராக நிறுத்த ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் எந்த உட்கட்சி பிரச்னையும் இல்லை என்றும், இது தவறான தகவல் என்றும், இதில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.

என்னிடம் கூறிவிட்டே 3 எம்பிக்கள் அணி மாறினார்கள் என்று டிடிவி தினகரன் கூறுவது 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக் என ஜெயக்குமார் தெரிவித்தார்.