மெர்சல்.. இதுவரை கட் இல்லை.. என்ஜாய் பண்ணுங்கள்: தயாரிப்பாளர் ஹேமா

ஹேமா ருக்மணி

 

சென்னை:

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் இருந்து  இதுவரை எந்தவொரு காட்சியும்  நீக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை எந்த வசனங்களும் மியூட் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்  விஜய் ரசிகர்கள் படத்தை ரசித்து பார்க்கலாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இவர், மெர்சல் படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட்டின் சி.இ.ஓ. ஆவார்.