விருப்ப மனுவுக்கு கட்டணமில்லை! டிடிவி தினகரன் அதிரடி

சென்னை.

ள்ளாட்சித் தோதலில் போட்டியிட விரும்பும் அமமுகவினா் விருப்பமனு வாங்கலாம் என்றும், அதற்கான கட்டணம் ஏதும் கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களை விநியோகம் செய்து கல்லாகட்டி வருகின்றன.

இந்த நிலையில்,  உள்ளாட்சித் தோதலில் அமமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல்  வரும் 29-ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். விருப்பக் கட்டணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. பூா்த்தி செய்யப்பட்ட மனுக்களை அந்தக் குழுவினரிடமே அளிக்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

இதன் காரணமாக அமமுகவில் விருப்பமனுவுக்கு கட்டணம் கிடையாது என்று கூறப்படுகிறது.