பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை: தமிழக போக்குவரத்துறை தலைவர் அறிவிப்பு

சென்னை:

திகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழகத்தில் மாதாந்திர பஸ் பஸ் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று தமிழக போக்குவரத்து துறை  கூடுதல் தலைமை செயலாளர் டேவிதார்  தெரிவித்து உள்ளார்.

மாநகர  பேருந்துகளில்  தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணமான ரூ.1000, 1300 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து திமுக தலைவர் மு.கஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார்.  அதில்,  போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்கத் தெரியாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  மாதாந்திர பயண அட்டையின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டேவிதார் தெரிவித்துள்ளார்.

பஸ் பாஸ் கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 300 ஆக உயர உள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: There is no idea to raise bus season ticket charges: Tamil Nadu Government, பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை: தமிழக போக்குவரத்துறை தலைவர் அறிவிப்பு
-=-